Sunday, August 2, 2009

பொல்லாத உலகம்....

ராஜ வசந்தமாய்
பூவே
நீ என் பார்வைத் தொட்டிலில்
விழும்போதெல்லாம்
உனக்கு தாலாட்டுப் பாடுவதே
தலையாய கடமையாய்
என் இமைகள்..

இலைச் சீப்புகளில் தலைவாரி
மலர்க்கண்ணாடியில் முகம் பார்த்து
நாணத்தோடு
நகர்ந்துவரும் தென்றலைப்போல்
உன் பாதங்கள்
கொலுசு நோகுமோ
பூமி நோகுமோ.. என்றபடி..

உன் புன்முறுவல் கண்டுதான்
சோம்பல் முறித்தான் சூரியன்

மா தவங்கள் கலைந்து
மயங்கச்சென்றது நிலவு.

மயக்கம் கலைந்து
எழுந்து வந்தது தாமரை

என்னது!..
நான் என்ன செய்கிறேனா?
இந்த நிகழ்வுகளை படமெடுக்க
என் பேனாவையும்,
கேமராவையும்
தேடியபடி.....

ஆராதனை யார்வேண்டுமானாலும்
செய்யலாம்.... மனமிருந்தால்
ஆலாபனை கூட
யார் வேண்டுமானாலும்
கேட்பதற்கு ஆளிருந்தால்..

பெண்ணே!
நான் கேள்விப்பட்டது உண்மையா?
உன்னைக்கண்டும் மலர்வதால்
சந்திரனுக்கும் அல்லிக்கும்
சங்கடமாமே....!

தயவு செய்து
நீ குள்க்கரைக்குப் போகவேண்டாம்!
உன்னை தடுக்கச் சொல்லி
நிலா
நட்சத்திரத் தொண்டர்களோடு
இரவு முழுதும் என்முன் மறியல்,

புல்லாங்குழல் குழந்தைகளின்
வேண்டுகோளுக்கிண்ங்கி
மூங்கில்கள் கூட அப்படித்தான்..

நீ பேசக்கூடதென்று
என்னிடம் பேரனி நடத்துகிறது

அட...!
நானென்ன வட்டாட்சி அலுவலரா?
இதென்ன?
என்னை நோக்கி பேரணியும்
ஊ................ர்வலமும்

பொல்லாத உலகம்.
3/3/1989

No comments:

Post a Comment